திரைப்படங்களின் வெற்றிக்குப் பல காரணிகளைக் கூறலாம் சிறந்த கதை நடிகர்களின் நடிப்பாற்றல் திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள பாடல்கள் இயக்கம் ஒளிப்பதிவு ஆகியவை படங்களின் வெற்றிக்கு மிகவும் துணையாய் உள்ளன பாதகாணிக்கை பாலும் பழமும் பாசமலர் பாகப் பிரிவினை புதிய பறவை போன்ற திரைப்படங்கள் திரைக்கதை மட்டுமின்றி அவற்றில் இடம் பெற்றுள்ள பாடல்களுக்காகவும் மக்களால் விரும்பி ஏற்கப்பட்டுள்ளது அத்தகைய பாடல்களை இயற்றிய கவிஞர்களின் சேவை போற்றுதலுக்குரியது மொழியின் பல்வேறு நுணுக்கங்களை அடுத்தடுத்த தலைமுறையினருக்கு எடுத்துச் செல்வதில் கவிஞர்களின் பங்கு மகத்தானது.
திரைப்படங்கள் இறை பக்தி உணர்வையும் மொழிப்பற்றுதலைவும் தேச பக்தியையும் மத நல்லிணக்கத்தையும் மனித நேயத்தையும் வளர்க்கத் தூண்டுதலாக அமைத்துள்ளன.
திரைப்படங்களில் காட்சிகளின் சுழலுக்கேற்ப பாடல்களை அமைப்பது மிகவும் சீரிய பணியாகும் பாடல்களில் சொற்களை அமைப்பதற்கு இலக்கண அறிவும் இலக்கிய அறிவும் அவசியமாகிறது.
பிற மொழி இலக்கியங்களையும் தமிழ் மொழியில் உள்ள இலக்கியங்களிவும் தமிழ் மக்காள் எளிதில் புரியக் கூடிய வகையில் அவற்றை எளிய நடையில் எடுத்துரைக்கும் மகத்தான பணியை கவிஞர்கள் செய்துள்ளனர் செய்து கொண்டிருக்கின்றனர்.
இருபதாம் நூற்றாண்டில் என்றென்றும் நினைவு கொள்ளும் திரைப்படப் பாடல்களை தமிழ் உலகிற்கு அளித்த சென்ற தலைமுறையின் ஒப்பற்ற கவிஞர்களாகிய காமுசரிப் கண்ணதாசன் அ மருதகாசி புலமைப்பித்தன் வாலி கம்பதாசன் கொத்தமங்கலம் சுப்பு சுரதா கே டி சந்தானம் மாயவநாதன் ஆலங்குடி சோமு பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் உடுமலை நாராயண கவி கு மா குமா பாலசுப்பிரமணியன் மற்றும் இன்றைய தலைமுறையின் சிறந்த கவிஞர்களாகிய கவிஞர் மு மேத்தா இயக்குனர் கங்கை அமரன் கவிப்பேரரசு வைரமுத்து கவிஞர் யுகபாரதி ஆகியோரின் படைப்புகள் என்றென்றும் என்றென்றும் போற்றுதலுக்குரியவனவாகும். இந்தக் கவிஞர்கள் திரைக்ககாட்சிக்கேற்ப தங்கள் சிந்தனையில் உருவான சொந்த படைப்புகள் பல செய்துள்ளனர் அன்றியும் பல்வேறு இலக்கியங்களில் அடங்கியுள்ள பாடல்களின் சாராம்சத்தை கொண்டு திரைக்காட்சிக்குப் பொருந்தும் வண்ணம் தங்கள் கற்பனையில் உருவாகிய பாடல்களையும் இயற்றியுள்ளனர்.
இவ்வாறு இலக்கிய ஞானத்தின் அடியொற்றி கவிஞர்கள் இயற்றிய திரைப்படப் பாடல்கள் இந்நூலின் பாகத்தில் இடம் பெற்றுள்ளன.





Reviews
There are no reviews yet.