“கவிஞர் நாகூர் கனியின் ‘மதம் கடந்த மனிதம்‘ என்ற இந்தத் தொகுப்பு நம் மண்ணின் மனித நேயக் கொடையாக விளங்குகிறது. பெயரில் நாகூரைப் பெயருக்கு மட்டும் வைத்திராமல் உள்ளபடியே அனைத்துச் சமய நதிகளின் சங்கமத் துறையாக நாகூர் நாயகம் அவர்களின் தர்ஹா அமைந்திருக்கும் ஊர் நாகூர். அந்த மண் வாசம் இந்தப் புத்தகம் முழுவதும் கமழ்கிறது.
சாதி மதச் சட்டங்களால் ஆன சிலுவைகளில் தம்மைத் தாமே மக்கள் அறைந்து கொள்ளும் இக்காலகட்டத்தில் இந்நூல் ஒற்றுமை இழைகளால் உருவாகி இருப்பது பாராட்டுக்குரியது.
கவிதைகள் மேற்கோள்களாகக் காட்டப்படுவதை அறிவோம். ஆனால் இங்கு மேற்கோள்களாகவே கவிதைகள் அணிவகுத்துள்ளன“ என இந்நூலைப் பற்றி கவியருவி தி.மு. அப்துல் காதர் அவர்கள் கூறியுள்ளார்.





Reviews
There are no reviews yet.