பிரிட்டிஷ் சாம்ரஜ்யத்தின் பேராசைக் கனவுகனை உடைத்து நொறுக்கி சின்னாபின்னமாக்க முனைந்த மாவீர யுத்த காவியம் விளைந்த சீமைதான் சிவகங்கைச் சீமை… 18ஆம் நூற்றாண்டின் கலகக்காரர்களாக மாறிய சிவகங்கைச் சீமையின் மருது சகோதரர்கள் பெயரை உச்சரிக்க கும்பினியர்கள் அன்றைய காலகட்டத்தில் அஞ்சி நடுநடுங்கினர் என்பது நிதர்சனமான உண்மை.
இந்திய மண்ணின் குரல்வலையைக் கடித்துக் குதறி, குருதி உறிஞ்சும் கும்பினியரின் குரூர முகத்தைப் புரிந்து கொண்ட மாவீர மருது சகோதரப் போராளிகள், முற்றிலும் புதிய வேட்டை முகமாகப் பதினெட்டாம் நூற்றாண்டு இந்தியாவின் விடுதலைக் குரலாக மாறி வரலாற்றில் உயர்ந்து நிற்கிறார்கள்…!
ராணி வேலு நாச்சியார், மருது சகோதரர்கள் ஆகியோரின் ஆட்சிகால வரலாற்றை விரிவாக வெளிப்படுத்தும் வட்டார இலக்கியங்களாக, சிவகங்கைச் சரித்திர அம்மானையும், சிவகங்கைச் சரித்திர கும்மியும் விளங்குகின்றன. நெருப்பாற்றில் விடுதலைப் போர் நடத்திய மாவீரர்கள் மருதுசகோதரர்களின் வீர வரலாறு யுகம் தாண்டிய யுத்த காவியமாக விளங்குகிறது…!
சிவகங்கைச் சீமையின் பெருமைமிக்க வரலாறு, ராணி வேலுநாச்சியார், மாவீரர் மருது பாண்டியர் ஆகியோரின் யுத்தகள வாழ்க்கையை மையப்படுத்தியே சுழன்று வருவதால், வரலாற்றை நேசிப்பவர்களுக்கு மிகவும் அதிர்வூட்டும் சுவாரசியக் களமாக என்றென்றும் அமைந்திருப்பது ஆச்சரியம் இல்லை…!





Reviews
There are no reviews yet.