“வெளுத்ததெல்லாம் பால் என்று எண்ணுபவன் அல்லன் வெள்ளந்தி மனிதன். தூய்மைமிகு நெஞ்சத்துக்குச் சொந்தக்காரனே வெள்ளந்தி மனிதன். எந்தச்சாயமும் பூசிக்கொள்ளாமல் அல்லது எந்தச் சாயத்துக்குள்ளும் விழுந்து விடாமல் சொந்த, சுய சுத்தச் சாயலில் வாழ்பவனே வெள்ளந்தி மனிதன். அந்த வெள்ளந்தி மனிதனாகத்தான் கவிஞர் நாகூர் கனி இந்த நூலில் உலக நடப்புகளை உள்வாங்கித் தன் சுய எண்ணங்களைப் படைத்திருக்கிறார்.
அழகின் சிரிப்பான இயற்கையிலும், இரு மனம் கூடும் காதலையும் காணாமல் கவிஞர்கள் பொதுவாக நூல் ஆக்குவதில்லை. அன்றாட நடப்பில் நாம் காணும் செயல்பாடுகளையும் எதார்த்தமான மனித இயல்புகளையுமே வெள்ளந்தி மனிதன் கண்டிருக்கிறான். சமூக பிரக்ஞை இல்லாமல் எழுதுகோலைக் கையிலேந்துவது உயிரிலா சவத்தைக் கட்டி மகிழ்வதாகும் என்பதை வெள்ளந்தி மனிதன் நன்கு உணர்ந்திருப்பது பாராட்டுக்குரியதாகும்“ என்று இந்நூலைப் பற்றி பேராசிரியர் முனைவர் சேமுமு. முகமதலி அவர்கள் கூறியுள்ளார்.





Reviews
There are no reviews yet.