“இந்திய நாட்டில் அனைத்து வளங்களையும் அதானியும் அம்பானியும் சூறையாடிக் கொழுக்கவே பாஜக ஆட்சி என்றால் அதைத் தட்டிக் கேட்பது தொடரும்…
அண்ணல் காந்தி தேசமாகப் பார்க்கப்பட்ட இந்தியாவை, அதானியின் கார்ப்பரேட் தேசமாக்குவதா?“
சொகுசாக நாட்டைச் சூறையாடிக் கொழுக்க அதானி அம்பானிகளுக்கு பட்டுக் கம்பளம் விரித்துப் பகல் கொள்ளைக்குத் துணை போகும் பாஜக ஆட்சிக்கு எதிராக இவ்வாறு தொடர்ந்து குரல் கொடுத்து ஆளும் ஆட்சிக்குத் தீராத தலைவலியாகிவிட்டார் ராகுல் காந்தி.
நடந்தால் நாடே அவர் பின் ஒற்றைச் சிந்தனையுடன் ஒற்றுமைப் பயணத்தி்ற்கு அணிவகுத்து நடக்கிறது…
செல்லும் இடமெல்லாம் ராகுல் காந்தியின் அறச்சீற்றம் பேரலையாக ஒலிக்கிறது.
அறச்சீற்றமிக்க ராகுல் காந்தியின் நடைப்பயணமும் நாடாளுமன்றத்தில் அவரது எதிர்ப்புப் போர் முரசுக் குரலும்தான் இப்போது ஆளும் கட்சிக்கு அச்சமூட்டக்கூடிய நிகழ்வுகளாகி விட்டது…!





Reviews
There are no reviews yet.