Skip to content

அன்புடன் நயாகரா

100.00

ஆசிரியர் : கவிஞர் புகாரி

“கடல் தாண்டி இருந்தாலும் தமிழையே சுவாசிக்கும் புகாரியைப் போன்ற படைப்பாளிகளின் புதிய வரவுகளால் தமிழ்க் கவிதை தழைக்கும் என நம்புகிறேன்.”

கவிஞர் புகாரியின் முதல் நூலான வெளிச்ச அழைப்புகளுக்கு கவிப்பேரரசு வைரமுத்து வழங்கிய அணிந்துரையில் உள்ள வைர வரிகளே இவை.

இந்த வரிகளை இன்றுவரை நிதர்சனமாக்கி, உலகெங்கிலும் செறிந்து வாழும் இலக்கிய நெஞ்சங்களில் ஆழமாக வேரூன்றி நிற்கும் இவரது ஆற்றல் அளவிடற்கரியது. ஒப்பீட்டிற்கும் அப்பாற்பட்டது.

தன் நினைவுக்கு வராத காலத்திலேயே கவிதை எழுத ஆரம்பித்த இவரை கவிஞரே என்று பள்ளிக்கூட ஆசிரியர்களே அழைத்தனர். 1979இல் இவரது முதல் கவிதை அலிபாபா சஞ்சிகையில் பிரசுரமானது.

பணி நிமித்தமாக 1981இல் சவுதி அரேபியாவிற்குச் சென்ற இவர் அங்கிருந்து கொண்டே தீபம், தாய், குமுதம் போன்ற சஞ்சிகைகளுக்கு கவிதைகளை அனுப்பலானார்.

1999இல் கனடாவுக்குப் புலம் பெயர்ந்த பின்பே எனக்கு அறிமுகமானார் கவிஞர். இவரது அழகான தமிழ் உச்சரிப்பும், தமிழ் எழுத்தும், தமிழ்ப் பற்றும் வெகுவாக என்னைக் கவர்ந்து கொண்டன.

இவரது முதல் நூல் 2002 இல் ‘வெளிச்ச அழைப்புகள்’ என்ற பெயரில் கனடாவில் வெளியானது.

கவிஞரின் புதிய இலக்கியத் தடம் அன்புடன் நயாகரா என்ற பெயரில் பதிவாகிறது.

பன்னிராயிரம் ஆண்டுகள் வரலாறு கொண்ட நயாகரா நீர்வீழ்ச்சியைக் கண்டு வியக்காதவர்கள் இல்லை. அவ்வண்ணமே இவரின் கவியரங்கக் கவிதைகளையும் வாசகர்கள் வாசித்து வியப்பார்கள் என்று நம்புகிறேன்.

கவியரங்கக் கவிதைகளை சரமாக்கிய இந்நூல் 10 அற்புதமான கவிதைகளை உள்ளடக்கிய ஒன்றாகும். கவிஞர் புகாரியின் நுண்ணிய உணர்வும், மூச்சும், அறிவும் இவற்றில் அப்படியே விரவி வருகின்றன.

அழகின் ஒளிநயப் படைப்பே கவிதை என்ற ஆலன் போ (Edger Allen Poe) என்பவரின் சிந்தனை வரிகளுடன் கவிஞரும் ஒத்துப் போகிறார். கவிதை என்பது கற்பனை, உணர்ச்சி ஆகியவற்றின் மொழியாகும். ஹாஸ்லிட் (William Hazlitt) அவர்களது அற்புத வரிகளும் இவருக்குப் பொருந்துகிறது.

இந்நூலில் இடம்பெற்றுள்ள 10 கவிதைகள் பின்வருமாறு

  1. தமிழ்காப்புத் தொல்காப்பியம்
  2. சொர்க்கம் இரண்டு
  3. புலம்பெயர் வாழ்வு தேவைதானா?
  4. மழையல்ல பிழை
  5. விபுலானந்தர்
  6. கனடா நூற்றைம்பது
  7. ஊடகத்தமிழ்
  8. வன்னி மகள்
  9. நாளைய தமிழன்
  10. நீராக நானிருந்தால்

ஆகிய பத்து தலைப்புகளைக் கொண்டது இவரின் ‘அன்புடன் நயாகரா’

இவ்வாறு கவிஞர் புகாரி எழுதிய அன்புடன் நயாகரா என்ற நூலிற்கு சிந்தனைப்பூக்கள் எஸ். பத்மநாபன் அவர்கள் கனடாவிலிருந்து எழுதிய அணிந்துரையில் இருந்து சில வரிகள்.

Author

Reviews

There are no reviews yet.

Be the first to review “அன்புடன் நயாகரா”

Your email address will not be published. Required fields are marked *