Skip to content

அரேபியாவின் அதிபதி

55.00

பழமையிலே ஊறிப்போய் இருக்கிற ஒரு நாட்டைப் புதுமையான இந்தக் காலத்தில் நிர்வாகம் செய்வது என்பது சுலபமான காரியமல்ல. முன்னுக்குப் பின் முரண்பட்ட எத்தனையோ சக்திகளைச் சமாளித்துக் கொண்டு செல்ல வேண்டும். அப்படி சமாளித்துக்

கொண்டு போகிற விஷயத்தில் கொஞ்சம் நிதானம் தவறி விட்டால் கூட கலகங்கள் ஏற்பட்டு விடும். நிர்வாகத்தை நடத்துவது என்பதே முடியாத காரியமாகப் போய் விடுகிறது. இங்கனம் ஊக்க மிகுதியால் நிதானம் தவறிச் சென்ற காரணமாக அரச பதவி இழந்தவர்களுடைய வரலாறுகளை நாம் சமீபகாலத்தில் பார்த்தும் கேட்டும் இருக்கிறோம்.

ஆனால் இந்த சரித்திரத்தின் நாயகனாகிய

இப்னு சுஊத் இது விஷயத்தில் வெற்றி வீரனாக விளங்கினார். இவர் ஊக்க மிகுதியினால் தமது நோக்கத்தை மறந்து விடவில்லை. தனது ஆளுகைக்கு உட்பட்ட ஜனங்களின் பருவத்திற்குத் தக்கபடி அவர்களைக் கொண்டு  செலுத்துவதில் இவர் சிறந்த நிபுணர் என்பதை இந்த நூலைப் படித்தவர்கள் நன்கு தெரிந்து கொள்ளலாம்.

தன்னம்பிக்கை உடையவர்கள் எந்த விதத்திலும் முன்னுக்கு வருகிறார்கள். விடாமுயற்சியும் உழைபாபிலே சலிப்புமக் கொள்ளாமையும் உடையவர்கள் மேலான பதவியை அடைகிறார்கள். இஃது உண்மை. இந்த உண்மையை நிரூபிப்பதற்கு உலக சரித்திரம் நமக்கு பல உதாரண புருஷர் களை எடுத்துக் கொடுத்திருக்கிறது. அப்படிப்பட்ட உதாரண புருஷர்களிலே இப்னு சுஊத் ஒருவர்.

இன்றைய உலக வல்லரசுகளின் மத்தியில் அரேபியா ஒரு கௌரவமான ஸ்தானத்தைப் பெற்றிருக்கிறது என்று சொன்னால் அதற்கு இப்னு சுஊதின் தீர்க்க தருஷ்டிசியும் ஆட்சி திறமையுமே காரணம்.

சுருக்கமாக இப்னுசுஊத் வாழ்வின் மேடு பள்ளங்களை நன்றாகக் கண்டறிந்தவர். சிறந்த வீரர். ஜனங்களே ஒருவராக இருந்து ஜனங்களை அவர் இப்படிப்பட்ட அவருடைய வாழ்க்கையை இந்த நூல் மூலம் தொண்டி நண்பர் எம். ஆர். எம் அப்துற்-றஹீம் நமக்கு எடுத்துச் சொல்லியிருக்கிறார்.

இவ்வாறு பழம்பெரும் எழுத்தாளரான வே. சாமிநாத சர்மா அவர்கள் 1943 ஆம் ஆண்டு இந்நூலிற்கு அளித்த அணிந்துரையில் கூறியிருக்கிறார்.

Author

Reviews

There are no reviews yet.

Be the first to review “அரேபியாவின் அதிபதி”

Your email address will not be published. Required fields are marked *