சர்வதேசமும் புருவம் உயர்த்தி வியப்பை வெளிப்படுத்திய பெரும் புரட்சியாக ஈரானில் அயத்துல்லா கோமெய்னி நடத்திய புரட்சி கூறப்படுகிறது.
மேற்குலக சார்பு மன்னராட்சியை நீக்கிவிட்டு மேற்குலக எதிர்ப்பு கொண்ட இஸ்லாமிய ஆதிக்கக் கொள்கையை வேரூன்றச் செய்தது இந்தப் புதுமைப்புரட்சி.
ஈரானிய முஸ்லீம்கள் முதலாளித்துவத்தையும் பொதுவுடமை வாதத்தையும் எதிர்க்க வேண்டும் என்றும், “கிழக்கும் வேண்டாம், மேற்கும் வேண்டாம், இசுலாமிய குடியரசே வேண்டும்” என்ற கோமெய்னியின் சூளுரை புரட்சிக்கான அடிப்படை நாதமாக இருந்தது.
மதத் தலைவராக இருந்தபடியே ஈரானில் அரசியலில் மிகப்பெரும் பங்காற்றியவர் அயத்துல்லா கோமெய்னி.
1979இல் கோமெய்னியால் துவங்கப்பட்ட ஈரானியப் புரட்சியை அடுத்து 2,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த பாரசீகப் பேரரசு முடிவுக்கு வந்தது.
ஏப்ரல் 1, 1979 அன்று ஈரானை இசுலாமியக் குடியரசு நாடாக அறிவித்து அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கி அயத்துல்லா கோமெய்னி நாட்டின் உயரிய தலைவராக அறிவிக்கப்பட்டார்.
இஸ்லாமின் மீட்சிக்கு வழிகோலியதாக ஷியா மற்றும் சன்னி முஸ்லீம் மக்களால் விரும்பப்பட்ட கவர்ச்சி வாய்ந்த தலைவராய் அயத்துல்லா கோமெய்னி கருதப்பட்டார் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.
1979 ஆம் ஆண்டில் “டைம் ஆண்டு நபராக” அமெரிக்க டைம் செய்தி இதழால் கோமெய்னி தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
சர்வதேச கவனத்திற்கு உரியவராக பவனி வந்த இமாம் அயத்துல்லா கோமெய்னியின் வாழ்க்கைப் பயணத்தின் ஒவ்வொரு பக்கங்களையும் ஒரு நடுநிலைப் பார்வையோடு அணுகி சிறப்பாக இந்நூலை எழுதியுள்ளார் நூலாசிரியர் ஜெகதா.
ஈரானைப் பற்றிய அகன்ற அரசியல் பார்வையை வாசகர்கள் அறிவதற்கு இந்நூல் வாசல் திறக்கும் என்று நம்புகிறோம்.
- எஸ்.எஸ். ஷாஜஹான்
நேஷனல் பப்ளிஷர்ஸ்
Reviews
There are no reviews yet.