உலகத்தில் காதல் இருக்கும்வரை லைலா – மஜ்னு கதையும் இருக்கும். காதலைப் போலவே அதுவும் அழியாதது; காலத்தால் மங்காதது. இளமைக் காலத்திலேயே லைலா – மஜ்னு கதையைக் காவியமாகப் பாட வேண்டும் என்ற ஆசை எனக்கு ஏற்பட்டது. எனக்கு ஒரு கெட்ட பழக்கம் உண்டு. ஆயிரமாயிரம் அழகிய மலர்கள் பூத்துக் குலுங்கும் பூவனத்தில் புகுந்த வண்டைப் போல்தான் நானும். ஒரு மலரில் அமர்ந்து தேன் குடிக்கும்போது அடுத்த மலர் அழைக்கும். அங்கே தாவி விடுவேன். அங்கேயும் அதே கதைதான். அடுத்த மலர் அடுத்த மலர் என்று தாவிக் கொண்டே இருப்பேன். ஒரு பூவிலும் ஆற அமர இருந்து தேன் குடிப்பதில்லை. இதனால் பாதகமும் ஏற்பட்டது. சாதகமும் ஏற்பட்டது. பல பூக்களின் அறிமுகம் உண்டானது சாதகம். இந்த பழக்கத்தால் லைலா – மஜ்னு காவியத்தை என்னால் பாட முடியவில்லை. எப்போதாவது அவர்கள் ஞாபகம் வரும். அப்போது ஏதாவது கவிதை வரி மின்னலாய் உதிக்கும். அதை எழுதி வைத்துக் கொள்வேன்.
இது போன்ற ஏராளமான செய்திகளை பல்வேறு தலைப்புகளில் ஜுனியர் விகடனில் “இது சிறகுகளின் நேரம்” என்ற தலைப்பில் எழுதிய சுமார் 200 கட்டுரைகளின் தொகுப்பு தான் ‘இது சிறகுகளின் நேரம்’ இரண்டு பாகங்களும். பாகம் – 1ல் 85 கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.
Reviews
There are no reviews yet.