இஸ்லாமியக் காவியம் என்ற முறையில் மிகவும் பிரபரமான நூல் சீறாப்புராணம் ஒன்றுதான். காவியங்கள்¸ பிள்ளைத்தமிழ்¸ கலம்பகம்¸ கோவை¸ குறவஞ்சி¸ தூது என்று பல துறைகளிலும் முஸ்லிம் புலவர்கள் யாத்துள்ள நூல்கள் பற்றி ஆசிரியர் நயத்துடன்¸ சிறந்த மேற்கோள்களுடன் தொகுத்து அளித்திருக்கிறார்.
உமறுப்புலவர் பாடிய சீறாப்புராணம் தொடங்கி¸ நவரசங்களும் அடங்கிய பல காவியங்களின் வரலாறுகளை இந்த நூலில் காணலாம். நபிகள் நாயகத்தின் புகழ் பேசும் காவியங்களே மிகுதியானவை.
இஸ்லாமியத் தமிழ்க் காவியங்கள் என்ற இந்த நூலைப் படிப்பதால்¸ கவிதை இன்பத்தையும் கற்பனை வளத்தையும் மாந்தி மாந்தி மகிழலாம். ஆசிரியர் சாலி அவர்கள் நடுநிலையில் நின்று தெளிவான விளக்கங்களுடன் இந்த நூலை எழுதியிருக்கிறார் என்று முதுபெரும் எழுத்தாளர் கி.வ.ஜ அவர்கள் தனது அணிந்துரையில இந்நூலைப் பற்றி கூறுகிறார்.
Reviews
There are no reviews yet.