இஸ்லாமிய இலக்கியம் என்பது உலகெல்லாம் பரந்து விரிந்து திகழ்கின்ற பெருஞ்சமுத்திரத்தைப் போன்றது. அந்தச் சமுத்திரத்தினுள் பொதிந்து கிடக்கும் ஐசுவரியங்களையெல்லாம் முற்ற முழக்க அள்ளி வெளிக்கொண்டுவந்து அனைவருக்கும் காட்சிப்படுத்துவது எப்பேர்ப்பட்டவர்க்கும் இயலாத செயல்.
நம் தமிழகத்தைச் சேர்ந்த பேரறிஞர் ஆர்.பி.எம். கனி அவர்கள் மேற்கொண்ட அத்தகைய நன்முயற்சியின் விளைவாய் உருவானதே ‘இஸ்லாமிய இலக்கியக் கருவூலம்’ என்னும் இந்நூல்.
இதில் ஆசிரியர் அவர்கள் அரபி¸ பார்ஸி¸ துருக்கி¸ உர்து¸ தமிழ்¸ ஆங்கிலம் ஆகிய மொழிகளிலுள்ள பிரசித்தி பெற்ற பிரதானமான இஸ்லாமிய இலக்கியங்களையெல்லாம் நமக்கு அறிமுகப்படுத்தி வைக்கிறார். ஆசிரியரின் உழைப்பின் உன்னதத்தை இதன் ஒவ்வொரு பக்கங்களிலும் உணர முடிகிறது. இஸ்லாமிய இலக்கியக் கடலின் பரப்பை அறிய விழைவோர்க்கு இந்நூல் ஒரு தோணியாகத் துணை இருக்கும் என்றால் அது மிகையாகாது.
-எஸ்.எஸ். ஷாஜஹான்
நேஷனல் பப்ளிஷர்ஸ்.
Reviews
There are no reviews yet.