“படிக்கிற காலத்தில் வகுப்பில் முதலாவதாக வருவது தொடங்கி, மாநிலத்திலேயே அதிக மதிப்பெண் பெற்ற மாணவராக வருவதற்கு ஆசை.
ஆட்டக்களத்தில் மாவட்டம் , மாநிலம் தாண்டி தேசிய அளவில் பரிசுகளை வாங்கிக்குவிக்கிற கனவு.
அலுவலகத்தில் நம்பர் ஒன் இடத்தைப் பிடிக்கிற இலட்சியம்- இப்படி வாழ்க்கையின் எல்லாத் துறைகளிலும் தாமே முதலிடம் பெறவேண்டும் என்கிற எண்ணம் யாருக்கு இல்லை?
ஆசையை நிறைவேற்றிக் கொள்ளவும் , கனவை நடைமுறைப்படுத்தவும், இலட்சியத்தை அடையவும் அதற்கான அறிவும், திறமையும், ஆற்றலும் இருந்தாக வேண்டும். உங்களைத் தகுதிப்படுத்திக் கொண்டால்தான் நம்பர் ஒன் ஆக முடியும்.
நம்மைப் போலவே பலரும் அந்த முதல் இடத்துக்கு முந்திக் கொண்டு இருக்கிறார்கள் . நாம் கொஞ்சம் அசந்தாலும் நமக்குப் பின்னால் வருகிறவர் நம்மைத் தாண்டி வெகுதூரம் போய் விடுவார். இங்கே ஒரு வெற்றியுடன் ஓய்ந்து விடுவதற்கில்லை. நேற்றைய வெற்றியை வைத்துக்கொண்டு இன்றைய உலகை எதிர்கொள்ள முடியாது. மாற்றங்களுக்கு ஈடுகொடுத்து வளர்ச்சி காண வேண்டுமெனில்தொடர்ந்து நம்மை புதுப்பித்துக் கொண்டாக வேண்டும்.
‘ முதலிடம் பெறுங்கள் ‘ நூல் எந்த துறையில் இருப்பவரையும் முதன்மை பெறச் செய்வதற்காக உருவாக்கப்பட்டது. உங்களை அடுத்த நிலைகளுக்கு நகர்த்திச் செல்வதோடு இன்னும் பல உச்சங்களை அடையச் செய்யவும் இந்நூல் உதவும் என்று நம்பலாம்”என்று இந்நூலின் ஆசிரியர் சி. எஸ். தேவநாதன் தனது முன்னுரையில் கூறியிருக்கிறார்.
Reviews
There are no reviews yet.