ஒன்றை ஒன்று விஞ்சும் போதுதான் அது வெற்றி எனக் கொள்ளப்படும். அதுவே சாதனையாகும் மிளிர்கிறது.
ஆனால் ஒரு நூற்றாண்டையும் கடந்து தன்னை விஞ்ச முடியாத அளவிற்கு மிகப்பெரிய உச்சத்தில் வீற்றிருப்பது நோபல் பரிசாகும். அந்த பரிசை பெறுவதே உலகில் உள்ள ஒவ்வொரு கண்டுபிடிப்பாளர் மற்றும் சாதனையாளர் இலட்சியமாகவும் கனவாகவும் உள்ளது.
ஆல்பிரட் நோபல் என்ற ஸ்வீடன் நாட்டு வேதியியல் அறிஞரே இந்தப் பரிசினை உருவாக்கியவர். தனது வேதியியல் அறிவின் மூலம் ஏராளமான கண்டுபிடிப்புகளை செய்தவர். அளப்பரிய செல்வம் சேர்த்தார். அந்த செல்வங்கள் பயனுடையதாக வேண்டும் என்ற எண்ணத்திலேயே நோபல் பரிசினை உருவாக்கினார்.
இயற்பியல், வேதியியல், மருத்துவம், அமைதி, இலக்கியம், பொருளாதாரம் ஆகிய ஆறு துறைகளில் நோபல் பரிசு வழங்கப்படுகிறது.
‘ நோபல் பரிசு பெற்ற இயற்பியல் விஞ்ஞானிகள்’ என்ற இந்நூலில் இயற்பியலில் சாதனை புரிந்த அறிவியல் அறிஞர்களைப் பற்றியும் அவர்களின் வாழ்க்கையையும் கண்டுபிடிப்புகளைப்பற்றியும் மிக அழகாக எழுதியுள்ளார் இந்நூலின் ஆசிரியர் திரு அரு.வி. சிவபாரதி அவர்கள்.
Reviews
There are no reviews yet.