எம்.ஆர்.எம். அப்துற்-றஹீம் அவர்கள் இந்நூலுக்காக எழுதிய முன்னுரையில் இவ்வாறு கூறுகிறார்:
‘இது வேதநூல்; இதில் ஐயமே இல்லை. பயபக்தி கொண்டோருக்கு (இது) நேரான வழியைக் காட்டும். அவர்கள் மறைவானவற்றை நம்புவார்கள்’ என்று இறைவன் தன் திருமறையில் கூறியதற்கு ஏற்ப பயபக்தி கொண்டவர்களுக்கு இந்நூலில் கூறப்பட்டிருப்பது நிச்சயமாக நற்பயன் நல்கும் என்பதில் எனக்கு அணுவத்தனையும் ஐயமேயில்லை. காரணம்¸ இதில் உள்ள ஒவ்வொரு சொல்லும் அல்லாஹ்வுடைய சொல்லாகும். அல்லாஹ்வுடைய சொல் ஒருபோதும் பொய்யாகாது. நானே இதில் கூறப்பட்டிருக்கின்ற திருவசனங்கள் சிலவற்றைப் பல்வேறு அலுவல்களுக்குப் பயன்படுத்திப் பலன் பெற்றுள்ளேன். ஒரு தடவையா இரண்டு தடவையா? அவற்றில் எதைக் கூறுவது¸ எதைக் கூறாதிருப்பது என்று எனக்கே தெரியவில்லை. பண நெருக்கடி ஏற்பட்ட காலை ‘வமையத்தகில்லாஹ்’ என்று துவங்கும் இறைவனின் திருவசனத்தை திரும்பத் திரும்ப பல தடைவ ஓதி வியத்தகு பலன் எய்தியுள்ளேன்.
இது உங்களுக்கு முழுக்க முழுக்க பலன் அளிக்க வேண்டுமாயின் நீங்கள் இறைபக்தி உடையவர்களாகவும் இறைவனின் பேரருளில் நம்பிக்கை கொண்டவர்களாகவும் இருக்க வேண்டுமென்று கூறிக் கொள்ள ஆசைப்படுகிறேன். அவ்விதமாயின் இவற்றால் நிச்சயமாக நீங்கள் நலன் பெறுவீர்கள். ஈமான் உள்ளவர்களுக்கு இறைவன் அளித்த மகத்தான பேறு இது. திருக்குரானால் ஏற்படும் நற்பயன்களில் இதுவும் ஒன்று.
Reviews
There are no reviews yet.