Skip to content

முஸ்லிம் வள்ளல்களின் வாழ்விலே

25.00

Out of stock

ஸ்லாமிய வரலாற்றில் வரையாது வழங்கிய வள்ளல்களின் பட்டியல் அண்ணல் நபி (ஸல்)அவர்களில்  இருந்து தொடங்கி வளர்ந்துகொண்டே செல்கிறது. அப்பட்டியலில் பேரொலியுடன் பிரகாசிக்கும் மனிதர்  மனிதர்களின், மனிதப் புனிதர்களின் வரலாற்று நிகழ்ச்சிகளைத் தொகுத்து ஒரு நூல் உருவில் தருமாறு என்னுடைய தந்தையாரைக் காண வந்த ஒருவர் அவரிடம் வேண்டிக் கொண்டாராம். இதனை என்னுடைய தந்தையார் என்னிடம் கூறி, சில நூல்களைத் தந்து அவற்றிலிருந்து சில இனிய நிகழ்ச்சிகளைப் பொறுக்கி எடுத்து தமிழாக்கம் செய்யுமாறு பணித்தார்கள். பலன்: தமிழுக்கு ஒரு நூல் கிடைத்துவிட்டது. அந்நூலே இந்நூல். இந்நூலுக்கு மூலகாரணமாக இருந்த அந்த அன்பர் எங்கிருந்தாலும் வாழ்க என்று வாழ்த்துகின்றேன்.

இந்நூலைப் படிக்கும் வாசகர்களாகிய நீங்கள் இந்நூலில் காட்சி வழங்கும் மனிதர்களும் மனிதர்கள்தான். இம்மண்ணுலகில் தான் வாழ்ந்து சென்றுள்ளார்கள் என்று இறும்பூது ஏதும் வண்ணம் அவர்களின் வாழ்வும் வல்லன்மையும் அமைந்திருப்பதைக் காண்பீர்கள் என்று நான் நம்புகிறேன்.

இந்நூல் தாமும் வாழ்ந்து பிறரையும் வாழ வைக்க விரும்புபவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் போன்று அமையும் என்பதில் ஐயமில்லை இந்நூலில்  கூறப்பட்டு இருப்பவர்கள் போன்று நாமும் வாழ இயலுமா, வழங்க இயலுமா என்று சிலர் கூறலாம். அவர்களுக்கு நான் கூற விரும்புவது எல்லாம் இதுதான்: எண்ணுங்கள்!எய்தப் பெறுவீர்கள்!! என்று இந்நூலின் ஆசிரியர் பாத்திமா ஷாஜஹான் தமது முன்னுரையில் கூறுகிறார்.

Author

Reviews

There are no reviews yet.

Be the first to review “முஸ்லிம் வள்ளல்களின் வாழ்விலே”

Your email address will not be published. Required fields are marked *