இந்நூலின் முன்னுரையில் அப்துற்-றஹீம் இவ்வாறு கூறுகிறார்.
என்னுடைய இந்த முயற்சியில் என்னுடைய வாசகர்களும் என்னுடன் ஒத்துழைப்பார்களாயின் நான் அதனை நன்றியுடன் ஏற்றுக் கொள்வேன். என்னுடைய நூல்களை இளைஞர்கள் தங்களுடைய நண்பர்களுக்கு வாங்கிப் பரிசளித்தும்¸ தாய் தந்தையர் தங்களின் தனயர்களுக்கு வாங்சிச் சன்மானமளித்தும்¸ முதலாளிகள் தங்களின் ஊழியர்களுக்கு வாங்கி அன்பளிப்புச் செய்தும்¸ செல்வந்தர்கள் தங்கள் ஊரிலுள்ள பள்ளி மாணவர்களுக்கும்¸ நூல் நிலையங்களுக்கும் வாங்கி நன்கொடை அளித்தும் இவ்விதம் செய்ய இல்லாதவர்கள் தங்களுடைய நண்பர்களிடம் அவற்றை வாங்கிப் படிக்குமாறு ஆலோசனை கூறியும் என்னுடைய முயற்சிக்கு ஊக்கமும்¸ ஆக்கமும் அளிக்கலாம். இவ்விதம் அவர்கள் செய்வார்களாயின் விரைவில் என்னுடைய கருத்துக்கள் உலகம் முழுவதும் பரவி உலக மக்களை வாழ்விப்பதோடு அதனால் விளையும் நன்மை அவர்களையும் சாரும் என்பதில் ஐயமில்லை.
என்னுடைய இந்த நூல் வியாபாரத்துறையில் புகுந்தவர்களை புதுவாழ்வு வாழச் செய்து அதன் காரணமாக அவர்கள் கோடி கோடியாய்ப் பொருளீட்டி கோடி கோடியாய் தர்மம் செய்து அழியாப் புகழ் பெறுவார்களாயின் அதைவிட எனக்குப் பெருமகிழ்வை அளிக்கக் கூடியது வேறொன்றுமில்லை.
Reviews
There are no reviews yet.