இந்நூலை எழுதிய ஹெரால்ட் ரஸ்ஸல் இரு கைகளையும் இழந்த ஒரு மாற்றுத் திறனாளி. கைகள் இருந்திருப்பின் ஒரு சாதாரண ஹெரால்ட் ரஸ்ஸலாக வாழ்ந்திருக்க வேண்டிய அவர் கைகளை இழந்ததனால் உலகப் புகழ் பெற்ற ஹெரால்ட் ரஸ்ஸலாக மாறிவிட்டார்.
அவர் எவ்வாறு உலகப் புகழ் பெற்ற ஹெரால்ட் ரஸ்ஸலாக மாறினார் என்பதை சுவைபட தமது வாழ்க்கை வரலாறாக எழுதியுள்ளார்.
அவரது வாழ்க்கை வராலாற்றை தமிழக மக்களும் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற நன்நோக்கில் அப்துற் – றஹீம் அவர்கள் தமிழாக்கம் செய்து 1954 – ம் ஆண்டு தமது யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ் மூலம் வெளியிட்டுள்ளார்.
68 வருடங்களாக பதிப்பில் இல்லாத இவ்வரிய நூலை இன்றைய தமிழ் வாசகர்களும் படித்துப் பயன்பெற வேண்டும் என்ற நன்நோக்கில் இந்நூலை மீண்டும் வெளியிடுகிறோம்.
யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ்
Reviews
There are no reviews yet.