Skip to content

அம்பேத்கர் – காந்தி இந்திய அரசியலில் எதிரும் புதிரும்

160.00

ஆசிரியர் : ஜெகாதா

இன்று நமக்கு மகாத்மா காந்தி அதிகம் தேவை என்பதில் சந்தேகம் இல்லை. நிச்சயமாக நமக்கு அம்பேத்கர் இன்னும் அதிகம் தேவை…!

அம்பேத்கர் ஒரு மரபுப் போரின் மையமாகத் தொடர்கிறார். அண்ணல் காந்தி கூட தீண்டாமையை வலுவாக எதிர்த்தாலும் மனுதர்மத்தைப் பலமாக ஆதரித்தார். காந்திஜியை மதித்த அதே நேரத்தில் அவரது கருத்துகளில் முரண்படவும் அம்பேத்கர் ஒரு போதும் தயங்கியதில்லை… தாழ்த்தப்பட்ட இனத்தவர்களுக்கு அரிஜன் என்று காந்திஜி பெயர் சூட்டினார். ஆனால் அம்பேத்கர் அந்தப் பெயரை வெறுத்தார். “தாழ்த்தப்பட்டவர்கள் கடவுளின் குழந்தைகள் என்றால் மற்றவர்கள் சாத்தானின் குழந்தைகளா?“ என்று காந்திஜியை நோக்கி கேள்வி எழுப்பினார்…

“நான் ஏதோ தீய வாய்ப்பால் ஒரு இந்துவாக பிறந்து விட்டேன். அதைத் தடுத்தல் என் கையில் இல்லை. அதனால் பல இன்னல்களையும் இழிவுகளையும் எதிர்கொள்ள நேர்ந்தது. ஆனால் நான் ஒரு இந்துவாக இறக்க மாட்டேன்…!

தான் பேசிய பேச்சு அகில இந்தியாவையே ஒரு உலுக்கு உலுக்கும் என்று அப்போது அம்பேத்கருக்குத் தெரிந்தே இருந்தது. அதன் காரணமாகவோ என்னவோ இன்று கூண்டுக்குள் அடைபட்டுக் கிடக்கும் நிலை அண்ணல் அம்பேத்கரின் சிலைகளுக்கு இருந்து வருகிறது. சிலைகள் உடைக்கப்படலாம், ஆனால் சித்தாந்தங்களை உடைக்க முடியாது என்பது மறுக்க முடியாத உண்மை…!

Author

Reviews

There are no reviews yet.

Be the first to review “அம்பேத்கர் – காந்தி இந்திய அரசியலில் எதிரும் புதிரும்”

Your email address will not be published. Required fields are marked *