Skip to content

இசையும் இஸ்லாமும்

110.00

ஆசிரியர்: நா. மம்மது

இசையும் இசுலாமும் என்ற நோக்கில் நான் எழுதி வெளிவந்த கட்டுரைகளை நூலாக வெளியிடத் தொகுத்துத் தரும்படி என் அன்பின் (யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ்) திரு. ஷாஜஹான் நெடுங்காலமாகவே (ஆண்டுகளாகவே) கேட்டு வந்தார். அவ்வாறு உருப்பெற்றதே இந்நூல்.

சில வரலாற்றுச் செய்திகளை வாசகர்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறேன். பற்பல கட்டுப்பாடுகள், தடைகள், அடக்கு முறைகளைத் தாண்டியே அரபிய இசை வளர்ச்சி பெற்று வந்திருக்கின்றது.

அரபிய இசை, பாரசீக இசை போன்ற பிற மரபு இசை இந்திய இசையுடன் கலந்து உருப்பெற்றதே இந்துஸ்தானிய இசை, இசுலாமியக் கலைஞர்கள் அரும் பாடுபட்டு வளர்த்ததே இந்துஸ்தானி இசை. இது மிக மிக விரிவாகவே பேசப்பட வேண்டிய விடயம்.

அதுபோன்று தமிழிசை வளர்ச்சிக்காகப் பாடுபட்ட தமிழக இசுலாமியர் பற்றி தமிழ் கூறு நல்லுலகும். ஏன் இசுலாமியரும் கூட அறி்ந்திட வேண்டும். அந்தக் கடமையை மேற்கொண்டு திரு. ஷாஜஹான் இந்நூலினைக் கொண்டு வருகிறார். அவருக்கு என் நெஞ்சின் இனிய நன்றி.

இனி வாசகர்கள் கட்டுரையினூடே தமிழிசையை, அறியலாம் – பேசலாம் – கேட்கலாம் – ஒன்றிணையலாம்“ இவ்வாறு இந்நூலின் ஆசிரியர் நா. மம்மது அவர்கள் இந்நூலைப் பற்றி கூறியிருக்கிறார்.

Author

Reviews

There are no reviews yet.

Be the first to review “இசையும் இஸ்லாமும்”

Your email address will not be published. Required fields are marked *