Skip to content

இந்திய அரசியலின் அறச்சீற்றம் பிரியங்கா காந்தி

160.00

ஆசிரியர் : ஜெகாதா

இந்தியாவின் இரும்புப் பெண்மணியாக அரசியலில் கோலோச்சி மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பேத்தி என்பதற்கான வீரிய அடையாளமாக, இன்றைய அரசியல் களத்தில் இடி முழக்கத்துடன் பிரவேசித்திருக்கிறார் பிரியங்கா காந்தி…!

கந்தகக் குடுவையில் தோய்த்து எடுத்த கண்ணிவெடிகளாய் பிரியங்காவின் நாவசைவில் தெரித்து விழும் சத்திய நெருப்பு, நாட்டை ஆள்பவர்களின் ஒட்டுமொத்த திரைச்சீலையைப் பற்றி எரிக்கத் தொடங்கிவிட்டது…

மக்கள் விரோத மகுடம் சூட்டிக்கொண்டு, நேர்மையற்ற நெஞ்சுக் கவசம் பூண்டு நாட்டை ஆள்பவர்கள், இனி நள்ளிரவுத் தூக்கம் கலைந்து புலம்பத் தொடங்கி விடுவார்கள்…!

நாடெங்கும் அதிகாரத் திமிர் ஒடுக்க பிரச்சாரம் செய்து வந்த, நிமிர்ந்த நடைப் பெண்ணரசி பிரியங்கா, இன்று நாடாளுமன்றத்தின் நட்ட நடுவே, கண்ணகி தீப்பந்தத்தைக் கையில் ஏந்திச் சுழற்றுவதைக் கண்டு திகில் அடைந்து போய் இருக்கிறது பாசிசக் கூட்டம்…!

சித்தாந்த எதிரிகளுக்குச் சிம்ம சொப்பனமாக, இவரது நாடாளுமன்ற நுழைவை உலக நாடுகள் புருவம் உயர்த்தி உற்று நோக்கத் தொடங்கியுள்ளன.

ஆம்! உத்திரப்பிரதேச அரசியலில் பிரியங்காவின் பிரச்சார வானவேடிக்கையைக் கண்டு “எங்களின் துர்கா தேவி நீங்கள்… நீங்கள் துர்கா தேவதையின் அவதாரம்“ என்று ஆர்ப்பரித்து ஆதரவுக் கரம் நீட்டுகிறார்கள் அனைத்திந்திய மக்கள் கூட்டம்.

Author

Reviews

There are no reviews yet.

Be the first to review “இந்திய அரசியலின் அறச்சீற்றம் பிரியங்கா காந்தி”

Your email address will not be published. Required fields are marked *