Skip to content

மங்காப் புகழ் கொண்ட மாவீரர் மருதுபாண்டியர்

130.00

ஆசிரியர் : ஜெகாதா

மரணத்தைக் கண்டு அஞ்சாத மருது பாண்டிய மாவீரர்களின் புகழை கம்பினியர் எனும் மரண வியாபாரிகள், இந்த மண்ணுலகெங்கும் பரவி விடாதபடி தடுத்திட பெரும்பாடுபட்டனர் என்பது பேருண்மை.

அப்பழுக்கற்ற மாவீரர்களின் வீர மரணங்களை இந்தய மண் என்றுமே தன்னில் மூடிப் புதைக்க விரும்பியதில்லை. மாறாக புனிதப்படுத்தவே முனைந்திருக்கிறது…!

மருது சகோதரர்களை ஆங்கிலேய அதிகாரம் புறக்கணித்து விட்டாலும், காலமும் வரலாறும் புறக்கணித்து விட முடியாது என்பது நிரூபணம் ஆகிவிட்டது.

கந்தகக் களமாகிவிட்ட ஒரு மூர்க்க சூழ்நிலையில் தான், ‘மரணம் வரினும் மண்டியிட மாட்டோம்’ என்று வீரிட்ட போர்க் குரல்கள் தென்னிந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில், சிவகங்கைச் சீமை போன்ற பாளையங்களில் இருந்து பெரும் கிளர்ச்சியுடன் ஒலிக்கத் துவங்கியது…!

விடுதலை யுகத்தின் வீரப்போர்வாள்களாக தங்களை அடையாளப்படுத்திக் கொள்ள வேண்டிய நிர்பந்தம், குருதி கொப்பளிக்க எழுந்த மருது சகோதரர்களுக்கு ஏற்பட்டதை வரலாறு மறைக்கத் தயாராக இல்லை என்பதை இந்நூல் விரிவாகக் கூறுகிறது.

Author

Reviews

There are no reviews yet.

Be the first to review “மங்காப் புகழ் கொண்ட மாவீரர் மருதுபாண்டியர்”

Your email address will not be published. Required fields are marked *