கவிஞர் பாரதன் ஒரு காந்தியச் சிந்தனையாளர். சமரசமில்லாத சமய நல்லிணக்கப் போராளி. ஐம்பது ஆண்டுகாலப் பொதுச் சேவைக்குச் சொந்தக்காரர். 16 நூல்களின் ஆசிரியர். பிரபலமான பட்டிமன்ற நடுவர். இடியென முழங்கும் சொற்பொழிவாளர். இவரின் தந்தை நேதாஜியோடு பணியாற்றியவர்.
கறுப்பு நிறத்தவர் தன்னோடு சமமாகப் பயணம் செய்யக் கூடாது என்ற நிறத் திமிர், ஒரு மனிதனை இருப்புப் பாதையோரம் தூக்கி எறிந்தது. அந்த அரை நிர்வாணப் பக்கிரி, ஆங்கிலேய ஆட்சியை இந்தியாவை விட்டே தூக்கியெறிந்தான்!
ஒரு நாடகக் கலைஞன், முடிதிருத்தும் சமூகத்தில் பிறந்ததால், முருகன் வேடம் போடக் கூடாது எனத் தடை போட்டது சாதித் திமிர். அந்த விஸ்வநாததாஸ் என்ற கலைஞன் முருகனாக வேடமிட்டு நடித்தபடியே மரணமடைய, அதே முருகன் வேடத்தோடு இறுதி யாத்திரை நடந்தது. பல்லாயிரக் கணக்கானவர்கள் அதில் பங்கேற்றனர்.
இவ்வாறு பல விசித்திரங்களைத் தன்னுள் அடக்கி வைத்துக் கொண்டிருக்கும் இந்நூல் வாசகர்களின் பெரும் வரவேற்பைப் பெறுமென நம்புகிறோம்.





Reviews
There are no reviews yet.