Skip to content

வாழ்வது ஒரு கலை

100.00

ஆசிரியர்: எம்.ஆர்.எம். அப்துற்-றஹீம்

வாழ்வாங்கு வாழ்ந்து வான்புகழ் பெறுவதே வாழ்க்கையின் முக்கியக் குறிக்கோள். இந்தக் குறிக்கோளை நாம் எய்த வேண்டுமாயின்¸ நம்முடைய வாழ்க்கையில் ஓர் ஒழுங்கு¸ வனப்பு மிளிர வேண்டும். உண்ணுவது¸ எண்ணுவது¸ உடுப்பது¸ உரையாடுவது ஆகியவற்றில் எல்லாம் இவ்விதத் தனிக் கவர்ச்சி அமைந்திருக்க வேண்டும். இவ்விதக் கவர்ச்சிதான்¸ மக்களை இழுத்து நிற்கும் மந்திர ஆற்றலாகும். அந்த மந்திர ஆற்றலை¸ வாழ்க்கையை ஒரு கலையாகக் கருதி அழகாக எண்ணவும்¸ செயலாற்றவும் செய்யும் ஒருவன் திட்டமாகப் பெற்றுவிடுவான் என்பதில் ஐயமில்லை.

இந்தத் தத்துவத்தை ஆதாரமாகக் கொண்டு மனிதன் எப்படி எண்ண வேண்டும்¸ எப்படி உடுக்க வேண்டும்¸ எப்படி உரையாட வேண்டும்¸ எப்படி அன்பு கொள்ள வேண்டும்¸ எப்படி நட்புச் செய்ய வேண்டும் – சுருங்கக் கூறின்¸ எப்படி இவ்வுலகில் வாழ வேண்டும் என்பனவற்றைத் தகுந்த மேற்கோளுடனும் விளக்கங்களுடனும் இந்நூலில் எழுதியுள்ளேன்.

இதனை படித்துவிட்டு ‘நன்றாக இருக்கிறது’ என்று கூறி¸ நூலை முதுகுப்புறம் போட்டு விட்டு என்னுடைய வாசகர்கள் மனநிறைவு பெறுவார்களாயின்¸ நான் ஒரு போதும் மனநிறைவு பெற மாட்டேன். அவர்கள் இதனை பன்முறை படித்து¸ இதில் கூறப்பட்டிருக்கும் உண்மைகளைத் தங்களுடைய வாழ்க்கையிலும் மேற்கொண்டு செயலாற்றி வாழ்வாங்கு வாழ்ந்து¸ வான்புகழ் பெறுவார்களாயின் அப்பொழுது தான் பாட்டின் பலனைப் பெற்று வருகிறேன் என்று என் மனம் மகிழ்ச்சியுறும்¸ அப்பொழுது தான் நான் இவ்வுலகில் வீணாக வாழவில்லை என்று என் உள்ளம் ஆறதலடையும்.

-அப்துற்-றஹீம்

Author

Reviews

There are no reviews yet.

Be the first to review “வாழ்வது ஒரு கலை”

Your email address will not be published. Required fields are marked *