அப்துற்-றஹீம் அவர்கள் இந்நூலில் இளமையின் பெருமையையும் இளமையில் கல்வி கற்க வேண்டியதன் இன்றியமையாத் தன்மையையும் விரிவாக எடுத்துரைக்கின்றார். கல்வியை கல்விப் பயிற்சி¸ ஒழுக்கப் பயிற்சி¸ உடற் பயிற்சி என்று மூன்று பிரிவுகளாகப் பிரித்து அவை பற்றிய ஆதாரப் பூர்வமான செய்திகள் பலவற்றைக் கூறியுள்ளார். முக்காலிக்கு எவ்வாறு மூன்று கால்களும் முக்கியமோ அது போன்றே இளைஞர்களுக்கு அம்மூன்றும் மிகவும் முக்கியம் என்பது என் கருத்து. ஆதலின் இளைஞர்கள் அம்மூன்றையும் ஒரே கண்கொண்டு நோக்கி அம்மூன்றிலும் சிறந்து விளங்க வேண்டும்;. ஏனெனில்¸ ஒன்றில்லா விட்டாலும் மற்ற இரண்டும் சிறக்கா.
இந்நூல் இளைஞர்களுக்கு ஒரு வழி காட்டும் ஒளி விளக்காக விளங்க வேண்டும் என்ற வேணவாவுடன்தான் இதனை எழுதியிருக்கிறார் ஆசிரியர். அந்த வேணவாவை இறைவன் நிறைவேற்றித் தரவேண்டும். இதனை அவர்கள் படித்ததன் பின்¸ இதனை அவர்கள் படிப்பதற்கு முன்பிருந்ததைவிடக் கல்வி¸ ஒழுக்கம்¸ உடல் நலன் பேணல் ஆகியவற்றில் அதிகமான ஊக்கமும் உற்சாகமும் காட்டுவார்கள் என்று நம்புவோம்.
Reviews
There are no reviews yet.